Enter your Email Address to subscribe to our newsletters
கள்ளக்குறிச்சி, 13 அக்டோபர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற கலைஞர்களும் 3000-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத கலைஞர்களும் உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் அடையாள அட்டை மற்றும் நலவாரியம் பதிவு செய்வதற்கு சுமார் 150 கிலோமீட்டர் பயணம் செய்து விழுப்புரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
எனவே நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுடைய நேரம் மற்றும் காலத்தை கருத்தில் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக இசைப்பள்ளி கலை பண்பாட்டு துறை மூலமாக இயங்கி வரும் சவகர் சிறுவர் மன்றம் கட்டிடம் அமைத்து தர வேண்டியும், மாவட்டத்தில் புதிதாக இசை பள்ளியை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு விதமான வேடங்களை அணிந்து நாட்டுப்புற கலைஞர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN