Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், அக்கட்சி தலைவரும் நடிகருமான விஜய் பேசினார். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, த.வெ.க., சார்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை விஜய் கரூர் வரவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன், விஜய் வீடியோகால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.மேலும், கரூர் வருவதற்கு போலீசார் அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு சென்னையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்துக்கு த.வெ.க., சார்பில் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் 16-ம் நினைவு நாள் இன்று (அக் 13) கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னையில் த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வெளியே நுழைவு வாசல் பகுதியில், அக்கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்கள் போஸ்டர்களில் இடம் பெற்று உள்ளன.
அதன் கீழே உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் எண்ணங்கள் ஈடேற சபதம் ஏற்போம் என்ற வரிகள் எழுதப்பட்டு உள்ளன.அதன் கீழே உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் எண்ணங்கள் ஈடேற சபதம் ஏற்போம் என்ற வரிகள் எழுதப்பட்டு உள்ளன. கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b