வழக்கறிஞர் ராஜிவ் காந்தி தாக்கப்பட்டதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை, 13 அக்டோபர் (ஹி.ச.) சென்னையில் இருசக்கர வாகனம் மீது விசிக தலைவர் திருமாவளவன் கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த ராஜிவ் காந்தி என்ற வழக்கறிஞர் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கடும் கண்
போராட்டம்போராட்டம்


மதுரை, 13 அக்டோபர் (ஹி.ச.)

சென்னையில் இருசக்கர வாகனம் மீது விசிக தலைவர் திருமாவளவன் கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த ராஜிவ் காந்தி என்ற வழக்கறிஞர் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கடும் கண்டத்தை தெரிவித்து வரும் சூழலில்.இன்று உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை தாக்கியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், விசிக தலைவர் திருமாவளவனை கைது செய்ய கோரியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத தமிழ்நாடு பாண்டிச்சேரி பார்கவுன்சில்-க்கு கண்டனத்தையும் பதிவு செய்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

நடவடிக்கைகள் எடுக்க தவறும் பட்சத்தில் அடுத்தடுத்த போராட்டங்கள் நடைபெறும் என வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / Durai.J