விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தினேஷ் குமார் உயிரிழந்த விவகாரம் - உடல் ஒப்படைப்பு
மதுரை, 13 அக்டோபர் (ஹி.ச.) மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யாகப்பா நகர் பகுதி சென்ற தினேஷ் குமார்(30) என்ற இளைஞரை, அண்ணாநகர் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து தினேஷ்குமாரின் உடல் கால்
Dineshkumar


மதுரை, 13 அக்டோபர் (ஹி.ச.)

மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யாகப்பா நகர் பகுதி சென்ற தினேஷ் குமார்(30) என்ற இளைஞரை, அண்ணாநகர் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து தினேஷ்குமாரின் உடல் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

பின்னர் தனது மகன் தினேஷ்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டி உயிரிழந்த தினேஷ் குமார் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அண்ண நகர் மற்றும் கேகே நகர் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது அண்ணா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்ட நிலையில் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இருந்த தினேஷ் குமாரின் உடல், அவர்களுது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN