Enter your Email Address to subscribe to our newsletters
விழுப்புரம், 13 அக்டோபர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுகுப்பம் ஊராட்சியில் 3 வது வார்டில் உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு நாட்களாக வாந்தி, பேதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 10 க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பி உள்ளனர்.
இதில் அய்யன் பெருமாள், செங்கேணி, சுந்தரம், குப்புசாமி, கிருஷ்ணவேணி, மண்ணாங்கட்டி, சரளா உள்பட 10 க்கும் மேற்பட்டோர், மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் தொடர்ந்து உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே பகுதியை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு நாட்களாக வாந்தி பேதி நோயால் பாதிப்புக்கு அப்பகுதியில் உள்ள குடிநீர் காரணமா? அல்லது அந்த தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகால் பகுதியில் அதிகளவில் மழைநீர் தேங்கி உள்ளது.
இதில் கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களை தாக்குகிறது. எனவே இவர்கள் பாதிப்புக்கான காரணம் எதுவாக இருக்கும் என தெரியவில்லை என கூறுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN