Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பள்ளம் இல்லா சாலை திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொது பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்துள்ளார்
சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சாலைகளில் உள்ள பள்ளங்கள் முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,பள்ளம் இல்லா சாலை திட்டத்தின் கீழ் 7 நாட்களுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தில் உள்ள பாலங்களில் பராமரிப்பு பணிகள் மற்றும் நீர்வழிப் சீரமைக்கவும்,வடகிழக்கு பருவமழையின் போது பாலத்தில் நீர் தேங்காாமல் இருப்பதற்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து கோட்ட பொறியாளர்களும் நம்ம சாலை செயலியில் எந்த புகாரும் வராத வண்ணம், அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,விரைவில் நம்ம சாலை செயலி புதிய வடிவத்துடன் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
அடுத்த மூன்று மாதங்கள் பருவ மழை பெய்யும் மாதங்கள் ஆகும். எனவே பொறியாளர்கள் சாலை பணியாளர்களை பயன்படுத்தி, தேவையான நடவடிக்கைகளை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் என அமைச்சர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ