Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 13 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஆயர்பாடி கிராமத்தை சேர்ந்த சஞ்சய் என்ற பால் வியாபாரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கமலக்கண்ணன்,கீர்த்தனா,நாகராஜ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
இந்த வழக்கில் இருந்தா மூன்று பேரும் ஜாமீன் பெற்று 5நாட்களுக்கு முன்பு வெளியே வந்த நிலையில் கமலக்கண்ணன் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கையெழுத்திட சென்று விட்டு இன்று மதியம் கோவை திரும்பி கொண்டிருந்தார்
தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் மத்தம்பாளையம் பகுதியில் வந்த போது அவர்களை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் கமலக்கண்ணனை சராமாரியாக அரிவாளால் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார்
காயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
Hindusthan Samachar / V.srini Vasan