திருநெல்வேலியில் 156 குழந்தைகளுக்கு இருதய பாதிப்பு
நெல்லை, 13 அக்டோபர் (ஹி.ச.) திருநெல்வேலி ஆறு மாதத்தில் 156 குழந்தைகளுக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக முகாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள குழந்த
Nellai Government Hospital


நெல்லை, 13 அக்டோபர் (ஹி.ச.)

திருநெல்வேலி ஆறு மாதத்தில் 156 குழந்தைகளுக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக முகாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு கண்டறியும் முகாம் நடைபெற்றது.

இந்த வருடம் (2025) ஏப்ரல் 2025 முதல் செப்டம்பர் 2025 வரை 3 இதய நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றுது.

இதில் 156 குழந்தைகளுக்கு இருதய நோய் கண்டறியப்பட்டு அதில் 40 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளனர். இச்சிகிச்சையானது முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக அவ்வப்போது முகாம் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN