Enter your Email Address to subscribe to our newsletters
நெல்லை, 13 அக்டோபர் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கேரளாவின் மூணாறு பகுதிக்கு 'இண்டஸ்ட்ரியல் விசிட்' சென்றுள்ளனர். இந்த பயணத்தின்போது, உடன் சென்ற பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
மூணாறு சென்று திரும்பியதும், பாதிக்கப்பட்ட மாணவி இந்த விவரத்தை தனது சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், சம்பந்தப்பட்ட பேராசிரியரைத் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது தாக்குதலில் முடிந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் கல்லூரி மாணவர்களான வீரவநல்லூரை சேர்ந்த ஸ்ரீதரன் (20), மேலப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி சுஜின் (20), முத்து ராசு (19), சங்கர் நகர சேர்ந்த ஷேக் முகமது மைதீன் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது இந்த நிலையில் பேராசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதன் பேரில் பேராசிரியர் ஜான் சாமுவேல் ராஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் விரைவில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN