Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 13 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள், பொருட்கள் வாங்க கோவை கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதையட்டி காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் சிலர் நெருக்கடியான சாலைகளில் தள்ளுவண்டி கடைகளை அமைத்து சாலையை ஆக்கிரமிப்பதால், அதிக அளவில் நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைகின்றனர்.
நாடு முழுவதும் வருகிறார் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதயொட்டி புத்தாண்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை களை கட்டி வருகிறது.
கோவை மக்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகள் பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பொதுமக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல், தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சாதாரண உடை அணிந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை பெரிய கடை வீதியில் காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினர். குறிப்பாக முன், பின் தெரியாத நபர்கள் அளிக்கும் உணவுப் பொருள்களை சாப்பிட வேண்டாம், உங்களது கவனத்தை திசை திருப்பி திருட்டில் ஈடுபடும் நபர்களிடம், கவனமாக இருக்க வேண்டும். பணம், நகைகளை கவனமாக கொண்டு செல்வதுடன் கூட்டத்தில் குழந்தைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.
பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால், கடை வீதிகளில் வாகனங்கள் நிறுத்த முடியாமல் கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. மேலும் பெரிய கடை வீதி போன்ற பகுதிகளில் சாலையோர பிளாட்பார்ம் கடைகள் அமைத்து சிறு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர், ஆனால் ஒரு சிலர் தள்ளுவண்டி கடைகளை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. அதேபோன்று ஒப்பனக்கார வீதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல் துறையினர் இது மட்டும் வருகின்றனர், அவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர்,
இந்நிலையில் சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகளை அமைத்து போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் தள்ளு வண்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அதனை மீறி அக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan