இரு நாட்டின் உறவுகள் ஆழமடைந்து மேலும் உத்வேகம் பெற ஒன்றாக இணைந்து உழைப்போம் - செஷல்ஸ் நாட்டின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, 13 அக்டோபர் (ஹி.ச.) கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றாக செஷல்ஸ் உள்ளது. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவுநாடாக உள்ள செஷெல்ஸ்சில் புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. இதில் பேட்ரிக் ஹெர்மினி புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
இரு நாட்டின் உறவுகள் ஆழமடைந்து மேலும் உத்வேகம் பெற ஒன்றாக இணைந்து உழைப்போம் - செஷல்ஸ் நாட்டின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து


புதுடெல்லி, 13 அக்டோபர் (ஹி.ச.)

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றாக செஷல்ஸ் உள்ளது.

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவுநாடாக உள்ள செஷெல்ஸ்சில் புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. இதில் பேட்ரிக் ஹெர்மினி புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் செஷல்ஸ் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது வலைத்தள பதிவில் அவர்,

செஷல்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பேட்ரிக் ஹெர்மினிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தியப் பெருங்கடலின் நீரை ஒருங்கே பயன்படுத்தும் பன்முகத்தன்மை கொண்ட நாடுகளாக விளங்குகிறோம்.

இருநாட்டின் உறவுகள் ஆழமடைந்து மேலும் உத்வேகம் பெற ஒன்றாக இணைந்து உழைப்போம்.

என தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM