பீகாரில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக மது விலக்கு - பிரசாந்த் கிஷோர் திட்டவட்ட அறிவிப்பு
பாட்னா, 13 அக்டோபர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளுமே மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மது காரணமாகவே இளைஞர்கள் தவறான வழிகளுக்குச் செல்வதாகவும் இதனால் மாநிலம் தழுவிய மது விலக்கைக் கொண்டு வர வேண்டும் என்ப
பீகாரில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக மது விலக்கு நீக்கப்படும் - பிரசாந்த் கிஷோர் திட்டவட்ட அறிவிப்பு


பாட்னா, 13 அக்டோபர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளுமே மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மது காரணமாகவே இளைஞர்கள் தவறான வழிகளுக்குச் செல்வதாகவும் இதனால் மாநிலம் தழுவிய மது விலக்கைக் கொண்டு வர வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது.

ஆனால், அதற்கு நேர்மாறாக பீகாரில் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நீக்குவோம் என்று பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

நிதிஷ் குமார் அரசின் மதுவிலக்குக் கொள்கை, மாநிலத்தின் நிதி நிலையைச் சீரழித்து ஊழலுக்கு வழிவகுத்துள்ளதாகவும் இது பொருளாதாரப் பேரழிவு என்றும் ஜன் சூராஜ் கட்சி விமர்சித்துள்ளது.

மேலும், மது விலக்கை நீக்குவதன் மூலம் ஆண்டுக்குச் சுமார் ₹28,000 கோடி வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்றும் ஜன் சூராஜ் கட்சி கூறுகிறது. இந்த நிதியைப் பயன்படுத்தி சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெரும் வளர்ச்சி கடன்களைப் பெறவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோக் ஜனசக்தி கட்சியின்

(ராம் விலாஸ்) மூத்த தலைவர் குமார் சௌரவ், ஜன் சூராஜ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அப்போது பேசிய ஜன் சூராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங்,

ஜன் சூராஜ் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு உடனடியாக நீக்கப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தத் தடையால் மாநிலம் ஆண்டுதோறும் சுமார் ₹28,000 கோடி இழக்கிறது.

அந்தப் பணத்தை பீகார் பொருளாதாரத்தை மேம்படுத்தப் பயன்படுத்தலாம். இதன் மூலம் மாநிலத்திற்குக் கூடுதலாக ரூ.28 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இதை வைத்து உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இருந்து ரூ.5 முதல் ரூ.6 லட்சம் கோடி கடன்களைப் பெற முடியும். பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு இதைப் பயன்படுத்தலாம்.

என்றார்.

பிரசாந்த் கிஷோர் கடந்த 2022ம் ஆண்டு பீகாரில் ஜன் சூராஜ் கட்சியைத் தொடங்கினார். அப்போது முதலே ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்திற்குள் மதுவிலக்கை ரத்து செய்வதாக மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்.

கடந்த 2016ல் நிதிஷ் குமார், மாநிலம் முழுக்க மது விலக்கைக் கொண்டு வந்த போதிலும், அதனால் மது அருந்தும் பழக்கம் குறையவில்லை என்று பிரசாந்த் கிஷோர் குறிப்பிடுகிறார். அதற்குப் பதிலாகக் கள்ளச்சந்தை மது வர்த்தகம் நடப்பதாகவும் இது போலீஸ் அத்துமீறல்களை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் பிரசாந்த் கிஷோர் சாடியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் செய்யும் முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளில் மது விலக்கும் ஒன்று என்று ஜன் சூராஜ் கூறி வருகிறது.

இது போன்ற கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டு, கடுமையான ஒழுங்குமுறை மற்றும் நவீன நிர்வாகத்தை அமல்படுத்துவதாக உறுதியளிக்கிறது.

Hindusthan Samachar / JANAKI RAM