வடசென்னை தாதா நாகேந்திரனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ரவுடிகள் யார்- யார்? பட்டியலை சேகரிக்கிறது சென்னை காவல்துறை
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச) வடசென்னையின் ரவுடி நாகேந்திரனின் இறுதி ஊர்லம் நேற்று நடந்தது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து ஒப்படைக்கப்பட்டது. வியாசர்பாடி எஸ்எம் நகரில் உள்ள வீட்டில் உடலை வைத்து
நாகேந்திரன்


Police


சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச)

வடசென்னையின் ரவுடி நாகேந்திரனின் இறுதி ஊர்லம் நேற்று நடந்தது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து ஒப்படைக்கப்பட்டது. வியாசர்பாடி எஸ்எம் நகரில் உள்ள வீட்டில் உடலை வைத்து குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்ற ரவுடிகள் யார் யார் என்ற பட்டியலை போலீசார் எடுத்து வருகின்றனர்.

அந்த பகுதி நேற்று முழுவதும் அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு போலீஸ், நுண்ணறிவு பிரிவு போலீஸ், உளவுத்துறை போலீஸ் என ரகசியமாக கண்காணிக்கும் பிரிவில் உள்ள போலீஸ் படை குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடந்து வந்தது. குறிப்பாக போலீசாரே ட்ரோன் மூலமாகவும், அஞ்சலி செலுத்த வந்தவர்கள், ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், சுடுகாட்டில் இருந்தவர்கள் என அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

அந்த காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தலைமறைவு குற்றவாளிகள், ரவுடிகள் எத்தனை பேர் வந்துள்ளனர்? அவர்களின் பட்டியலை எடுத்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ