இந்திய ரிசர்வ் வங்கி காசோலைகளை நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை கோரிக்கை
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.) இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய காசோலை உடனடி தீர்வு முறையில் பல காசோலைகள் நான்கு நாட்களுக்கும் மேலாகத் தாமதமாக தீர்வு செய்யப்படுவதுக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இது த
இந்திய ரிசர்வ் வங்கி காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை கோரிக்கை


சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)

இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய காசோலை உடனடி தீர்வு முறையில் பல காசோலைகள் நான்கு நாட்களுக்கும் மேலாகத் தாமதமாக தீர்வு செய்யப்படுவதுக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று (அக் 13) கூறியிருப்பதாவது,

காசோலை சிக்கலுக்கு தீர்வு காண்க

இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய காசோலை உடனடி தீர்வு முறை, வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் தலைவலியாக மாறியுள்ளது. காசோலைகள் ஒரே நாளில் தீர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தொழில்நுட்ப குறைபாடுகள், தரமற்ற ஸ்கேன் மற்றும் புதிய முறைக்குப் பயிற்சி பெறாத ஊழியர்கள் காரணமாக, பல காசோலைகள் நான்கு நாட்களுக்கும் மேலாகத் தாமதமாகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அனைத்து காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை குலைக்கும் இந்த அலட்சியத்திற்கு ஆளும் ஒன்றிய பாஜக அரசாங்கமும், ஆர்பிஐ-யும் பொறுப்பு ஏற்று விளக்கம் தர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b