Enter your Email Address to subscribe to our newsletters
விருதுநகர், 13 அக்டோபர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் 3 மாதங்களுக்கு பின் மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் துணை மேயர் பிரியா, ஆணையர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் 173 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது.
மாமன்றக்கூட்டம் தொடங்கிய உடன் திமுக கவுன்சிலர் பாக்யலட்சுமி, சிவகாசி மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞரை நீக்க வேண்டும் என 30 கவுன்சிலர்கள் கையெழுத்து இட்டு மனு அளிக்கப்பட்டது.
3 ஆண்டுகளாக பூங்கா பிரச்சினை உள்ளது. ஆனால் ஆக்கிரமிப்பாளர் பூங்காவுக்கு ஆதரவாக இருப்பது போன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் விசாரணையில் நீதிமன்ற நடவடிக்கை குறித்து மாநகராட்சி வழக்கறிஞர் தெரிவித்த விளக்கத்தில் அவரை நீக்க வேண்டிய அவசியம் எழவில்லை. அந்த தீர்மானத்தில் உள்ள பிழை சரி செய்யப்படும், என ஆணையாளர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து திமுக கவுன்சிலர் ஶ்ரீநிகா, ஆண்டுக்கு 4 கூட்டங்கள் மட்டுமே நடத்தினால் மக்கள் பிரச்சினைகளை எப்படி பேச முடியும் என்றும் தற்போதைய மேயர் போட்டோ சூட் நடத்துவதிலும் தன்னை விளம்பரப்படுத்துவதிலுமே தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.
சிவகாசி மாநகராட்சியின் நான்காண்டுகளாக மேயர் பதவி வகிக்கும் இவர் எவ்வித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மேயர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் மீதம் இருக்கும் ஒரு ஆண்டில் நல்லவர்கள் மேயராக வரட்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் மாமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் பாதியிலேயே கூட்டம் முடிக்கப்பட்டு மேயர் சங்கீதா கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
Hindusthan Samachar / ANANDHAN