தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூத்துக்குடி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகின்றது. அந்த வகையில் தூத்துக்குடி-பெங்களூரு இடையே அக் 16 ஆம் தேதி சிறப்பு ரெயில் தற்போது அற
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூத்துக்குடி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகின்றது. அந்த வகையில் தூத்துக்குடி-பெங்களூரு இடையே அக் 16 ஆம் தேதி சிறப்பு ரெயில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பெங்களூருவில் இருந்து வருகிற 16-ந்தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06561), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06562), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

பெங்களூருவில் இருந்து வருகிற 21-ந்தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில் (06567), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06568), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

பெங்களூருவில் இருந்து வருகிற 17, 21 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி வரும் சிறப்பு ரெயில் (06297), சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து வருகிற 18, 22 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06298), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (அக் 13) காலை தொடங்க உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b