Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது, அவருக்கு தனிச்செயலாளராக இருந்தவருமான லட்சுமிகாந்தன் பாரதி அண்மையில் தனது நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இன்று (அக் 13) லக்ஷ்மி காந்தன் பாரதி தனது குடும்பத்தினருடன் சென்னை முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது லட்சுமி காந்தன் பாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (அக் 13) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
நூற்றாண்டு காணும் திரு. லட்சுமி காந்தன் பாரதி! அனைவருக்கும் எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு!
விடுதலைப் போராட்ட வீரர் - மொழிப்போர்த் தீரர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் பெயரன், விடுதலைப் போராட்டத் தியாகிகள் கிருஷ்ணசாமி பாரதி, லட்சுமி பாரதி ஆகியோரின் மகன் என நாட்டுக்காக உழைத்த குடும்பத்தின் வழித்தோன்றலாகப் பிறந்து, 16 வயது மாணவராக விடுதலைப் போராட்டத்தில் தொடங்கி, மதுரை மாவட்ட ஆட்சியர், தலைவர் கலைஞரின் முதல் தனிச் செயலாளர் எனப் பரந்த பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்!
நாட்டுப்பற்றில் உறுதி, மக்கள் தொண்டில் நாட்டம், எளிமை என நானிலமும் போற்றும் நற்பண்புகளைக் கொண்ட திரு. லட்சுமி காந்தன் பாரதி அவர்களது வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b