தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை முயற்சி
தென்காசி, 13 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவரது மகன் முனியாண்டி வயது 60. இவருக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் அதை மீட்டு தர கோரி முனியாண்டி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலு
Tenkasi Collector Office


தென்காசி, 13 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவரது மகன் முனியாண்டி வயது 60. இவருக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் அதை மீட்டு தர கோரி முனியாண்டி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதனால் விரக்தி அடைந்த முனியாண்டி இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு கொடுப்பதற்காக வருகை தந்தவர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது இடத்தை மீட்டுத் தரக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கடந்த வாரம் ஆட்சியில் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெயை ஊத்தி தற்கொலைக்கு முயல்வதற்காக வருகை தந்தார்.

அப்போது ஏற்கனவே பலர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட சம்பவம் நடந்ததால் தான், கொண்டு வந்த மண்ணெண்னெயை அருகே ஒழித்து வைத்து விட்டு சென்றதாகவும் இன்று வந்து அதே மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது சம்பந்தமாக அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN