தமிழகத்தில் இதுவரை 19 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது – உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.) சென்னை போரூர் காரம்பாக்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மதுரவாயில் சட்டமன்ற தொகுதி
Udhay


சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை போரூர் காரம்பாக்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மதுரவாயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1551 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

மதுரவாயல் வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் பேசிய தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,

உண்ண உணவு, இருக்க இடம்,உடுத்த உடை என்பதுதான் மக்களின் அடிப்படைத் தேவை, இதில் முக்கியமானது இருக்க இடம்;உங்களுடைய கஷ்டங்களை பதற்றங்களை போக்கும் விதமாக இன்றைக்கு பட்டா வழங்க உள்ளோம்,

இன்று முதல் நீங்கள் மகிழ்ச்சியாக உங்கள் வீடுகளில் உறங்கலாம்,

மதுரவாயல் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம், மதுரவாயில் மட்டுமல்ல சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளில் புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்,

சென்னையில் மட்டும் 1.40 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 19 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. கழக அரசிற்கு ஒவ்வொரு நாளும் மக்களின் ஆதரவு பெருகி வருகின்றது, அரசை தேடி மக்கள் வர வேண்டாம்,மக்களைத் தேடி அரசே வரும் என்ற நிலையை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.

கலைஞர் வழியில் நம்முடைய முதலமைச்சர் மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி வருகின்றார்

முதியோர்கள் வீட்டுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டம்,காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம் போன்ற முற்போக்கான திட்டங்களை நாம் நிறைவேற்றியதால் தான் இன்றைக்கு 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெற்று இந்தியாவிலே முதல் மாநிலமாக நாம் உள்ளோம் என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ