எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர், 14 அக்டோபர் (ஹி.ச.) ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பா
2 terrorists shot dead while trying to infiltrate the border


ஸ்ரீநகர், 14 அக்டோபர் (ஹி.ச.)

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதை கண்டறிந்த ராணுவத்தினர் எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களின் ஊடுருவலை தடுக்கும் முயற்சிகளில் பாதுகாப்பு படையினர் இறங்கினர்.

பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே சண்டை நீண்ட நேரம் நீடித்தது.

பின்னர் நீண்ட நேரம் போராடி ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். அப்போது பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

என்கவுன்டர் நடந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை, ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b