விற்பனைக்கு வைத்து இருந்த 5 கிலோ கஞ்சா - மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் கைது
கோவை, 14 அக்டோபர் (ஹி.ச.) கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகில் உள்ள வாகன நிறுத்தம் பகுதியில் கடந்த (28.08.2025) அன்று 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மதியார் ரஹ்மான் மொல்லா (26) என்பவரை பேரூர் அ
5 kg of ganja kept for sale: A man from West Bengal arrested by the district police – Action taken under the Goonda Prevention Act!!


கோவை, 14 அக்டோபர் (ஹி.ச.)

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகில் உள்ள வாகன நிறுத்தம் பகுதியில் கடந்த (28.08.2025) அன்று 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மதியார் ரஹ்மான் மொல்லா (26) என்பவரை பேரூர் அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக மதியார் ரஹ்மான் மொல்லா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.

அந்த பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அந்த நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான மதியார் ரஹ்மான் மொல்ல என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / V.srini Vasan