பொள்ளாச்சியில் 16 வயது சிறுமி பாலியல் வன்புணர்ச்சி - 21 வயது வாலிபர் போக்சோ வழக்கில் கைது
பொள்ளாச்சி பொள்ளாச்சி, 14 அக்டோபர் (ஹி.ச.) கோவை மாவட்டம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த க
A 16-year-old girl in Pollachi was sexually assaulted, and a 21-year-old youth was arrested under the POCSO Act; the Goonda Prevention Act was invoked against him following action by the Coimbatore district collector


பொள்ளாச்சி பொள்ளாச்சி, 14 அக்டோபர் (ஹி.ச.)

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவியரசன் (21) என்பவர் மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, கைது செய்த கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கவியரசன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அந்த நபர் பாலியல் குற்றவாளி என கருதி கவியரசன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அவ்வுத்தரவின் படி பாலியல் வன்புணர்ச்சி வழக்கு குற்றவாளியான கவியரசன் (21) என்பவரை சிறையில் இருந்த பொழுது குண்டர் தடுப்புச் சட்டத்தின் நடவடிக்கை கீழ் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / V.srini Vasan