முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாடு - நவம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதியில் நடைபெறும்
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.) தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு அரசு நலத்திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது முதல்வர் ஸ்டாலின், உயர்மட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்ட
நவம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாடு


சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு அரசு நலத்திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறது.

இந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது முதல்வர் ஸ்டாலின், உயர்மட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.

மேலும் ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்களையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும் சென்னைக்கு வரவழைத்து அந்தந்த மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்கள் நல பணிகள், அப்பணிகள் உண்மையாகவே மக்களை சென்றடைந்துள்ளதா? என்பது பற்றி ஸ்டாலின் கேட்டறிந்து அறிவுரை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு சென்னையில் நவம்பர் மாதம் 5, 6 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் இந்த மாநாடு நடைபெறும் என்றும் மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குவார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இம்மாநாட்டில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், சரக டி.ஐ.ஜி, மற்றும் ஐ.ஜி.க்கள் கலந்துகொள்வார்கள்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b