பராமரிப்பு பணி காரணமாக சென்னை -சூலூர்பேட்டை இடையே பயணிகள் ரெயில் இன்று ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.) பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் இன்று (அக் 14) ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-கூ
சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் இன்று ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் இன்று (அக் 14) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள தடா, சூலூர்பேட்டை ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (அக் 14) பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.40 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்னை சென்டிரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

அதே போல, சூலூர்பேட்டையில் மதியம் 12.35 மணிக்கு சென்னை சென்டிரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b