Enter your Email Address to subscribe to our newsletters
ராமநாதபுரம், 14 அக்டோபர் (ஹி.ச.)
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே அண்மையில்தான் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டது.
உச்சிப்புளி அருகே இந்திய கடற்படை விமான நிலையம் செயல்பட்டு வருவதால் மின்சார வயர் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்த போட் மெயில் ரயில், வழக்கம் போல உச்சிப்புளி அருகே உள்ள இந்திய கடற்படை விமான தளம் பகுதியை கடக்கும் போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டதால் அந்தப் பகுதியை கடக்க முடியாமல் சென்னை - ராமேஸ்வரம் ரயில் அந்த இடத்திலேயே நின்று விட்டது.
அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்திலிருந்து டீசல் என்ஜின் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் அந்த ரயில் ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு சென்றது.
இதனால் 3 மணி நேரம் தாமதமாக அந்த ரயில் ராமேஸ்வரம் சென்றது. தற்போது அந்த மின்சார வயர் துண்டிக்கப்பட்ட பகுதியில் மின் இணைப்புகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN