Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)
25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் பட்டியலை சமர்ப்பிக்கும்படி தனியார் பள்ளிகளின் இயக்குனர் பிறப்பித்த சுற்றறிக்கையை எதிர்த்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம் தொடர்ந்த வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு தொடரப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மாணவர் சேர்க்கை முடிந்து இரண்டாம் பருவம் துவங்கியுள்ள நிலையில் தமிழக அரசு இந்த சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது.என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கு, கல்வி உரிமைச் சட்டத்தையும் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்காததால் நடப்பாண்டில் தாமதம் ஏற்பட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
தனியார் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல -
புதிதாக எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளக்கூடாது.
கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிப்பு அக்டோபர் 31 ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ