திட்ட குழு துணை தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சனின் மாமனார் நாகராஜன் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.) தமிழக திட்ட குழு துணை தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சனின் மாமனார் நாகராஜன் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் இன்று (அக் 14) வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவத
தமிழ்நாடு மாநில திட்ட குழு துணை தலைவர் பேராசிரியர் திரு ஜெயரஞ்சனின் மாமனார் நாகராஜன் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்


சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)

தமிழக திட்ட குழு துணை தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சனின் மாமனார் நாகராஜன் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று (அக் 14) வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு மாநில திட்ட குழு துணை தலைவர் பேராசிரியர் திரு ஜெயரஞ்சன் அவர்களது மாமனார் திரு. நாகராஜன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.

அன்னாரை இழந்து வாடும் திரு ஜெயரஞ்சன் மற்றும் அவரது துணைவியார் திருமதி ராணி ஜெயரஞ்சன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b