Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 14 அக்டோபர் (ஹி.ச.)
உலகளாவிய சைபர் பாதுகாப்பு மாதம் மற்றும் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு வார கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்திய கணினி சங்கம் மாணவர் கிளை மற்றும் கோவை நகர காவல்துறையுடன் இணைந்து, கோவை ரேஸ்கோர்ஸில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம் வெற்றிகரமாக நடைபெற்றது.
கோயம்புத்தூரின் துணை காவல் ஆணையர் (தலைமையகம்) திருமதி. எம். திவ்யா, ஐபிஎஸ், அவர்கள்நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சி.வி. ராம்குமார் தலைமை தாங்கினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.சௌந்தர்ராஜன், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வைப் பரப்புவதற்கும்பொறுப்பான டிஜிட்டல் நடத்தையை ஊக்குவிப்பதற்கும் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சியை எடுத்துரைத்தார்.
மேலும் ,ரேஸ்கோர்ஸில் தொடங்கிய நடைப்பயணத்தில், ஐநூறுக்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள்மற்றும் கல்லூரியின் மாணவ உறுப்பினர்கள் பங்கேற்றனர், அவர்கள் சைபர் சுகாதாரம், பாதுகாப்பான ஆன்லைன் நடைமுறைகள் மற்றும் டிஜிட்டல் குற்றங்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் பதாகைகள் மற்றும்வாசகங்களை ஏந்திச் சென்றனர்.
இந்நிகழ்வில், துணை காவல் ஆணையர் பேசும்போது,
சைபர் மோசடி, ஃபிஷிங், தரவு மீறல்கள், மொபைல் போன், மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தவறான பயன்பாடுகள் தொடர்பானஅச்சுறுத்தல்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வூட்டுவதற்கான ஒரு பொது முயற்சியாக இந்நிகழ்வுசெயல்பட்டது என்று கூறினார்.
இதில் கோவை நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்அழகுராஜா, துணை ஆய்வாளர்கள் திருமதி சுகன்யா, பிரியங்கா, தாமரைக்கண்ணன், கல்லூரியின் இந்திய கணினிசங்க மாணவர் கிளை தலைவர் டாக்டர் பி. பெருமாள் மற்றும் நடைப்பயணத்தின் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர்எஸ். ஹரிஹர கோபாலன் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan