கர்ப்பிணிகள், முதியவர்கள், நீரிழிவு பாதிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முன்கூட்டியே மருத்துவமனைக்கு வர வேண்டும் - பொது சுகாதாரத்துறை
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச) தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. அதில், மழைக்காலம் துவங்க உள்ளதால் அரசு மருத்துவர்கள், செவிலிய
Dms


சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது.

அதில், மழைக்காலம் துவங்க உள்ளதால் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் எந்த நேரத்திலும் பணிக்கு வரத் தயாராக இருக்க வேண்டும்

தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மக்கள் மீட்பு மையத்தில் உணவு, தண்ணீர் உள்ளிட்டவை தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் அவசரகால தடுப்பூசி, படுக்கைகள் உள்ளிட்டவை தட்டுப்பாடு இல்லாமல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் ஜெனரேட்டர், போதுமான அளவு எரிபொருள்கள் இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மழைக்குப் பிறகு குடிநீர் சுத்தமாக வருகிறதா?என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

காய்ச்சல், தோல் வியாதி என வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

பாம்பு உள்ளிட்ட விஷக் கடியுடன் வரும் நபர்களுக்கு முதலுதவி செய்து உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.

அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்காதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மழைநீர் தேங்கினால் அவசர சிகிச்சைக்கு வரும் மருத்துவ பயனாளர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், அனைவருமே உடனடியாக மாற்று வார்டுக்கு மாற்றும் வகையில் மாற்று அறையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள், முதியவர்கள் நீரிழிவு நோய் பாதித்தவர்கள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடன் இருப்பவர்கள் முன்கூட்டியே மருத்துவமனைக்கு வர வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் பாம்புகள், விஷ பூச்சிகள் மற்றும் நாய் தொல்லைகள் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு உடனடி அவசர சிகிச்சை வழங்க வேண்டும்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நேரத்துடன் பணிக்கு வரவேண்டும்.

மக்களை பாதுகாத்து உயிரிழப்பு இல்லாத வகையில் மருத்துவ பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குனர் சோமசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ