Enter your Email Address to subscribe to our newsletters
தர்மபுரி, 14 அக்டோபர் (ஹி.ச.)
உலக அளவில் எண்ணை வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நிலக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு தேவையான எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்வது அத்தியாவசியமாகிறது.
அந்த வகையில் தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பயிரிப்பட்ட நிலக்கடலை, தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. நாட்டுக்கடலை, குஜராத் நாட்டுக்கடலை, ஆந்திரா நிலக்கடலை, உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
இதனால் அப்பகுதிகளில் நிலக்கடலை அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
புன்செய் பயிராக பயிரிப்படும் நிலக்கடலை நீர்வளம் தற்போது அதிகம் உள்ளதால், நல்ல விளைச்சலை கொடுத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஏக்கருக்கு 20 மூட்டை வரை விளைச்சல் கிடைத்துள்ளது. அத்துடன் விலையும் அதிகம் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், விளை நிலங்களை பண்படுத்தி, டிராக்டர் ஓட்டி உழுது வருகின்றனர்.
இந்தாண்டு அனைத்து வகை பயிர் விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b