Enter your Email Address to subscribe to our newsletters
பிஜாப்பூர், 14 அக்டோபர் (ஹி.ச.)
நக்சல் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பீஜாப்பூரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக இறங்கி வருகின்றனர்.
பல லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் இயக்கத்தினர் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில், வழக்கம் போல் பீஜாப்பூர் பகுதியில் நக்சல் ஒழிப்பு வேட்டையில் இறங்கிய கூட்டு நடவடிக்கைக்குழுவினர் அங்குள்ள வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு
51 கையெறி குண்டுகள், 100 பண்டல் அலுமினியம் வயர், 50 ஸ்டீல் பைப்புகள், 40 இரும்பு தகடுகள், 20 இரும்பு ஷீட்டுகள் போன்றவற்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
இவை அனைத்தும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுவதாகும்.
இதுதவிர, அதிக சக்தி கொண்ட வெடிக்கும் திறன் கொண்ட வெடி குண்டுகள் பூமியில் புதைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து பாதுகாப்புப்படை உயரதிகாரிகள் கூறுகையில்,
இவை அனைத்தும் தங்களை குறி வைத்தே வைக்கப்பட்டுள்ளது, படு தீவிரமாக ஆராய்ந்து அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளோம்.
கைப்பற்றப்பட்டவை பெரும் நாச வேலைக்கு பயன்படுத்த நக்சல்கள் திட்டமிட்டு இருக்கலாம். என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b