Enter your Email Address to subscribe to our newsletters
கரூர், 14 அக்டோபர் (ஹி.ச.)
கரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காவல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கு மாதிரி தேர்வு நாளை (அக் 15) நடைபெறவுள்ளது.
இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கரூர் வெண்ணைமலை வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பல்வேறு போட்டிகளுக்கு தேர்வு பயிற்சி வகுப்பு நடக்கிறது. தற்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 1,352 காவல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வு வரும் டிச., 21ல் நடக்கிறது.
இப்போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை நடக்கிறது.
இதன்படி நாளை (15ம் தேதி) நடக்கும் மாதிரி தேர்வுக்கு, இன்று நேரடியாக பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 63830 50010 89731 60980 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b