Enter your Email Address to subscribe to our newsletters
நாமக்கல், 14 அக்டோபர் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் கண்டெய்னர் லாரியுடன் தப்பி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் 27.09.24 நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே போலீசார் கொள்ளையர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது தாறுமாறாக லாரியை ஏற்றி சேதப்படுத்தியதோடு, பிடிக்க முயன்ற போலீசார் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதனை தொடர்ந்து குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஒருவன் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை திருச்செங்கோடு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி விசாரணை நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, குற்றம்சாட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 3 நபர்களுக்கு 24 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN