Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)
திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி மோசடி செய்துவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஏற்கனவே ஜாய் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகார் தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் திருமண மோசடி புகாரில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் வழக்கறிஞரும், மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் ஜாய் கிரிசில்டா கடந்த 8 ஆம் தேதி புகார் அளித்தார்.
காவல்துறையினர் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மாதம்பட்டி ரங்கராஜ் 10 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி விட்டதாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளது. எங்களை அணுகி உள்ளனர். அதற்கான ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும், தனக்கும் தனது பிள்ளைக்கும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு காரணம் மாதம்பட்டி ரங்கராஜ் தான் எனவும் ஜாய் கிரிசில்டா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜூக்கு மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் நாளை புகார் கொடுத்த ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவும் ஆஜராகும்படி ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ