Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 14 அக்டோபர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் தேனூர் அருள்மிகு சுந்தரவள்ளியம்மன் திருக்கோயிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா இன்று மாலை முதல் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 16 ஆம் தேதி வரை திருவிழா நடத்துவதற்கு திருக்கோயில் அறங்காவலர் குழுவினரால் திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்படி திருக்கோயில் நிர்வாகத்தை கவனிக்கவும், புரட்டாசி திருவிழா நடத்துவதற்கும் சோழவந்தான், அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் சிறப்பு அலுவலராக நியமனம் செய்து இந்து அறநி்லையத்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே தேனூர் கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் புரட்டாசி பொங்கல் திருவிழாவை சிறப்பு அலுவலர் மூலமாக நடத்தக்கூடாது என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சிறப்பு அலுவலர் மூலமாக கோவில் திருவிழாவை இன்று மாலை முதல் முளைப்பாரி நிகழ்வுடன் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தகோரி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN