Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை சைதாப்பேட்டையில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் முகாமை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் , மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 30 ஆயிரம் மருத்துவ முகாம்கள் வரை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டால் கூட அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கரை அகலப்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
முதலமைச்சர் தொடர்ந்து அணையின் கொள்ளளவு கண்காணித்து தேவைக்கேற்ப அவ்வப்போது நீரை வெளியேற்ற அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு ஒரே நாளில் ஒரு லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறந்த காரணத்தால் தான் சென்னையே பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
நீர்நிலைகள் அளவை தொடர்ந்து கண்காணித்து ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் முதலமைச்சர் அவரே நேரில் ஆய்வு மேற்கொள்வது விளைவாக ஐந்தாண்டுகளில் நீர்நிலை ஓரங்களில் இருக்கும் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ