Enter your Email Address to subscribe to our newsletters
சிவகங்கை, 14 அக்டோபர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரச்சார பயணத்தை முடித்துவிட்டு நெசவாளர் காலனியில் கிராமசபை கூட்டம் நடத்தி மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும் போது,
கரூர் சம்பவத்தில் மக்கள் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது. அதை வரவேற்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை நான் குறை சொல்ல முடியாது. ஆனால் உச்சநீதிமன்றமே உயர்நீதிமன்றத்துக்கு பல கேள்விகளை கேட்டுள்ளது.
மேலும் உயிரிழந்த 41 பேரின் உடல்களை ஒரே இடத்தில் எப்படி பிரேத பரிசோதனை செய்தீர்கள், எத்தனை மேஜைகள் இருந்தன என்று அடுக்கடுக்கான கேள்விகளை தமிழக அரசிடம் கேட்டுள்ளது.
நாங்கள் கேட்டதை போன்று சிபிஐ விசாரணை கிடைத்துள்ளது.
இந்த தீர்ப்பு மூலம் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடித்து தண்டனைகள் நீதிமன்றம் மூலம் வழங்கப்படும் என்று கூறினார் மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயத்தால் 65 பேர் உயிரிழந்தபோது முதல்வர் செல்லவில்லை.
ஆனால் கரூர் சம்பவத்துக்கு உடனே வந்துள்ளார் என்பதால் மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.
திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனது பிரச்சார பயணத்தில் பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்பார் என்று கூறினார்
Hindusthan Samachar / Durai.J