Enter your Email Address to subscribe to our newsletters
மும்பை, 14 அக்டோபர் (ஹி.ச.)
நக்சல்கள் ஒழிப்பில் தீவிரம் காட்டும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதன் காரணமாக நக்சல் அமைப்பின் முக்கிய பதுங்கும் இடங்கள் தாக்கி ஒழிக்கப்படுகின்றன.
நக்சல் அமைப்பின் முன்னணி தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து நக்சல்கள் சரண் அடையும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் கட்சிரோலியில் இன்று
(அக் 14) நக்சல்களின் வெற்று சித்தாந்தங்களில் வெறுப்படைந்த தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பின் தளபதி சோனு என்ற மல்லோஜுலா வேணுகோபால் ராவ் 60 பேருடன் போலீசில் சரண் அடைந்தார்.அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர்.
இதே போல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 போலீசாரை வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நக்சலைட் சகன்டுட்டி தினபு ( வயது 30) கேரள மாநிலம் மூணாறு அருகே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மூணாறு வந்து ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
Hindusthan Samachar / vidya.b