பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது
நெல்லை, 14 அக்டோபர் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிருஷ்ண பெருமாள் மற்றும் அருண் ஆகிய இரண்டு பேரை போலீசார் இன்று கைது செ
Prison


நெல்லை, 14 அக்டோபர் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கிருஷ்ண பெருமாள் மற்றும் அருண் ஆகிய இரண்டு பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில், குற்ற எண் 200, 201, மற்றும் 202 என மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குற்ற எண் 202/25-ன் கீழ், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 191(2) (பொய் சாட்சியம் வழங்குதல்), 296(b) மற்றும் 351(3) ஆகியவற்றின் கீழும், வெடிபொருள் சட்டத்தின் (Explosive Substances Act) பிரிவு 3(a) (வெடிபொருளைக் கொண்டு உயிருக்கோ அல்லது உடைமைக்கோ சேதம் விளைவித்தல்) மற்றும் தமிழ்நாடு பொது சொத்து சேத தடுப்புச் சட்டத்தின் (TNPPDL Act) பிரிவு 3-ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN