Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக சட்டசபை கூட்டம் இன்று (அக் 14) காலை 9.30 மணிக்கு கூடியது.இன்று முதல் 17ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்.
இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து முன்னாள் கவர்னர் கணேசன், இ.கம்யூ., மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பீலா வெங்கடேசன் ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவக்கப்பட்டது. அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது.
நாளை மீண்டும் சட்டசபை கூடி, கூடுதல் மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதம், 16ம் தேதி வரை நடக்கும். விவாதத்திற்கு, 17ம் தேதி பதில் அளிக்கப்படும்.
இந்நிலையில் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றக வந்த அன்புமணி ராமதாஸ் ஆதரவு பாமக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீரென சட்டசபை வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாமக சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b