65 தொகுதிகளில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோர் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பாட்னா, 14 அக்டோபர் (ஹி.ச.) பீகார் சட்டசபைக்கு வருகிற நவம்பர் 6 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வருகின்றன. தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கி
65 தொகுதிகளில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோர் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு


பாட்னா, 14 அக்டோபர் (ஹி.ச.)

பீகார் சட்டசபைக்கு வருகிற நவம்பர் 6 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வருகின்றன.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் ஜன சுயராஜ்ஜிய கட்சி, தனது 51 பேர் இடம்பெற்ற முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து உள்ளது. இந்த நிலையில் 2-வது கட்டமாக 65 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

பத்திரிகையாளர்களிடம் அதுபற்றிய தகவலை தெரிவித்த பிரசாந்த் கிஷோர்,

இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 31 பேர் மிகவும் நலிவடைந்த பிரிவினர், 21 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 21 பேர் முஸ்லிம்கள்.

என்று கூறி உள்ளார்.

வேட்பாளர் பட்டியலில் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் கோட்டையாக கருதப்படும் ஹார்னாட் தொகுதியில் கமலேஷ் பஸ்வான் நிறுத்தப்பட்டு உள்ளார்.

மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவின், சொந்த ஊரான ரகோபூர் தொகுதியில், 3-வது வெற்றியை பெறும் நோக்கில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

இந்த தொகுதியில் அவரை எதிர்த்து பிரசாந்த் கிஷோர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலிலும் அந்த தொகுதியின் வேட்பாளர் அறிவிக்கப்படாமல், ரகசியத்தை தொடர வைத்து இருக்கிறார்கள்.

Hindusthan Samachar / JANAKI RAM