Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் 2023-24ல், போக்குவரத்துத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட, மாநிலத்தின் 20 பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) கணினி வசதியுடன் கூடிய தானியக்க ஓட்டுநர் தேர்வு மையங்களை அமைக்கும் திட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்ததிட்டத்தின் ஒரு பகுதியாக, மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், தமது நிறுவன சமூகப்பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ், தற்போதுள்ள வழக்கமான ஓட்டுநர் தேர்வு மையங்களை தானியங்கியாக மாற்ற முன்வந்துள்ளது.
முதற்கட்டமாக, 2025-26 நிதியாண்டில் 10 பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களில் தானியக்க மையங்கள் உருவக்கப்பட உள்ளது.
அதன் அடிப்படையில் இன்று தமிழக அரசு மற்றும் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கிடையிலான ஒப்பந்த அறிக்கை சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் கையெழுத்தானது.
இந் நிகழ்வின் போது,
ஐ.ஏ.எஸ்., கூடுதல் முதன்மைச் செயலாளர் (உள்துறை), ஆர். கஜலட்சுமி, ஐ.ஏ.எஸ்., போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையர் மற்றும் போக்குவரத்துத்துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b