பராமரிப்பு பணிகள் காரணமாக தென் மாவட்ட ரெயில் சேவைகள் மாற்றம்
திருச்சி, 14 அக்டோபர் (ஹி.ச.) பராமரிப்பு பணிகள் காரணமாக தென் மாவட்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் கூறுகையில், மதுரை ரெயில்வே கோட்டத்தில் பல இடங்களில் பராமரிப்பு பணி
தென் மாவட்ட ரெயில் சேவைகள் பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றம்


திருச்சி, 14 அக்டோபர் (ஹி.ச.)

பராமரிப்பு பணிகள் காரணமாக தென் மாவட்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் கூறுகையில்,

மதுரை ரெயில்வே கோட்டத்தில் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் செங்கோட்டை -மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16, 17, 18 மற்றும் 22-ந் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 23 மற்றும் 26-ந் தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்பட உள்ளது. இதே போல் கன்னியாகுமரி -ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் இதே வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.

குருவாயூர் -சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 15, 16, 17 மற்றும் 21, 22 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

சென்னை எழும்பூர்- மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்் தேதி சென்னையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு வழியில் ஏதாவது ஒரு இடத்தில் 40 நிமிட நேரம் நிறுத்தப்படும். இதே போல் 28-ந்தேதி 30 நிமிட நேரம் நிறுத்தப்படும்.

சென்னை எழும்பூர்- தூத்துக்குடி சிறப்பு விரைவு ரெயில் சென்னையில் இருந்து வருகிற 28-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு வழியில் ஏதாவது ஒரு இடத்தில் 110 நிமிட நேரம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM