Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில், சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று (அக் 13) நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, வரும் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை 4 நாட்கள் நடைபெறும் என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி தமிழக சட்டசபை 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று (அக் 14) கூடியது. இன்றைய கூட்டத்தொடர் கூடியதும் சபாநாயகர் அப்பாவு, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் 41 பேருக்கு இரங்கல் செய்தி வாசித்தார்.
மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களின் புகைப்படங்களுடன் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து ஆளுநராக இருந்த இல கணேசன், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உள்ளிட்டோருக்கு தமிழக சட்டசபை உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
Hindusthan Samachar / vidya.b