முதலமைச்சர் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தை கனடா உள்ளிட்ட நாடுகள் பின்பற்றுகிறது - தமிழச்சி தங்க பாண்டியன்
சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.) அங்கன்வாடி குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கல்வி திட்டம் துவக்க விழா சென்னை கே‌.கே நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க ஆபரணங்கள், சட்டமன்ற உறுப்பினர்
Tamil


சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)

அங்கன்வாடி குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கல்வி திட்டம் துவக்க விழா சென்னை கே‌.கே நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க ஆபரணங்கள், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தமிழச்சி தங்க பாண்டியன்,

அங்கன்வாடி மையங்கள் என்பது ஏதோ குழந்தைகளை கொண்டு வந்து விட்டுவிட்டு அவர்களுக்கு உணவு கொடுத்து உறங்க வைக்கின்ற ஒரு மூன்று மணி நேரத்திற்கான உறைவிடம் மட்டுமல்ல.

குழந்தைகளுக்கு கண்களை எதை சரியாக பார்க்க பழக்குவது காதுகளில் என்னென்ன மொழிகளை கேட்க பழக்குவது என்னென்ன நிறங்களை அல்லது எந்தெந்த உறவுகளை அல்லது எப்படி அழைக்க வேண்டும் அல்லது புரிந்து கொள்வது இப்படி சமூக வாழ்க்கைக்கான கம்யூனிட்டி லிவிங்காக அவர்களை தயார் படுத்துகின்ற ஒரு இடம்.

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை நோக்கி அங்கன்வாடிகள் துவக்கப்பட்ட ஆண்டு தமிழ்நாட்டில் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ல் கலைஞர் கருணாநிதி மூலம் துவக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்கள் துவங்க வேண்டும் என்று அறிவித்திருந்த அந்த நிலையிலே இந்தியாவில் தமிழ்நாட்டில் முதன்முதலாக இந்த அங்கன்வாடி மையங்களை துவக்கிய பெருமைக்குரியவர் கலைஞர் கருணாநிதி. அவருடைய வழியில் ஆட்சி நடத்துகின்ற நம்முடைய குழந்தைகளுக்காக மிகக் குறிப்பாக இன்றைய தினம் சர்வதேச நாடுகள் கனடா நாடு உட்பட காலை உணவு திட்டத்தை பின்பற்றுகின்ற அளவிற்கு குழந்தைகளுடைய நலனில் அக்கறை செலுத்துகின்ற நம்முடைய முதலமைச்சர், தான் பொறுப்பேற்றுக் கொண்ட அந்த நாளிலே இருந்து அங்கன்வாடிகளுக்கு தனி கவனம் செலுத்துகிறார்.

நீங்கள் பார்த்திருக்கலாம் gcc அந்த ஏற்பாட்டின் படி நடக்கின்ற அத்தனை அங்கன்வாடி மையங்களிலும் மிக அழகாக சுற்றுச்சூழல் குழந்தைகளுக்கான ஒரு நியாயமான சூழ்நிலையை உருவாக்குவது என்பது தான் முதலமைச்சர் அதிகாரிகள் உள்ளிட்ட எங்களைப் போன்ற அத்தனை பேருக்கும் இட்டு இருக்கின்ற முதல் கட்டளையும் அறிவுறுத்தலுமாகும்.

அறிவுறுத்தலோடு அவர் நின்றுவிடவில்லை தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 54,449 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. அந்த மையங்கள் பெரும்பாலானவை. அதில் சில மையங்கள் வாடகை வளாகத்தில் இயங்கி வருகின்றன என்பது முதலமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

2025 நிதிநிலை அறிக்கையில் வாடகை வளாகத்தில் இயங்கி வருகின்ற 500 அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கு புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு 83 கோடி ஒதுக்கீடு செய்ததாகவும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்க பாண்டியன்,

இந்த அரசாங்கம் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. பட்ஜெட்டிலும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு கல்வியில் முன்னிலையில் இருக்கிறது.

முதலமைச்சர் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தை , கனடா உள்ளிட்ட நாடுகள் பின்பற்றுகிறது.

இந்த திட்டத்தினுடைய முக்கிய நோக்கம் அடிமட்ட நிலையிலே முதற்கட்ட கல்வி நிலையிலேயே குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவது எல்லா பள்ளிகளிலும் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்.

கற்றலுக்கான பாடத்திட்டம் வரையறைக்குட்பட்டு கற்பிக்கப்படுகிறது. எல்லாவற்றையும் விட அங்கன்வாடி ஊழியர்கள் அங்கன்வாடி கற்பிக்கின்ற ஆசிரியர்களுடைய பொறுப்பு கூடுதல் பொறுப்பு என்று கூறினார்.

வாக்கு திருட்டு பற்றி பேசியவர், இந்தியா கூட்டணி கட்சியினர், ராகுல் காந்தி தொடர்ந்து வாக்கு திருட்டு பற்றி பேசி வருவதாகவும், பாஜக தங்கள் தவறை மறைக்க தொடர்ந்து அதை எதிர்த்து வருவதாகவும் கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ