தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை - ஐந்தருவியில் குளிக்க தடை
தென்காசி, 14 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது பெய்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீரா
Aintharuvi


தென்காசி, 14 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது பெய்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீரானது தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றாலம் மெயின் அருவியில் பேரிக்கார்டுகள் அமைக்கப்பட்ட ஓரமாக நின்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், மெயின் அருவியில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க குற்றாலம் மெயின் அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN