25 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் - குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
கோவை, 14 அக்டோபர் (ஹி.ச.) கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் கடந்த (14.09.2025) அன்று 25 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த ஆந்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த கன்ட்ல ராம லட்சுமன் (20) மற்றும் மண்டல வீரபாபு (21) ஆகியோர்களை செட்டிபாளையம் கா
Two men from Andhra Pradesh who had kept 25 kg of ganja for sale were subjected to action under the Goonda Prevention Act, based on a recommendation by the district superintendent; the Coimbatore District Collector took action accordingly


Two men from Andhra Pradesh who had kept 25 kg of ganja for sale were subjected to action under the Goonda Prevention Act, based on a recommendation by the district superintendent; the Coimbatore District Collector took action accordingly


கோவை, 14 அக்டோபர் (ஹி.ச.)

கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் கடந்த (14.09.2025) அன்று 25 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த ஆந்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த கன்ட்ல ராம லட்சுமன் (20) மற்றும் மண்டல வீரபாபு (21) ஆகியோர்களை செட்டிபாளையம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கன்ட்ல ராம லட்சுமன் மற்றும் மண்டல வீரபாபு ஆகியோர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகளான கன்ட்ல ராம லட்சுமன் மற்றும் மண்டல வீரபாபு ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

Hindusthan Samachar / V.srini Vasan