Enter your Email Address to subscribe to our newsletters
செங்கல்பட்டு, 14 அக்டோபர் (H.S.)
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் பல்வேறு பாடப் பிரிவை சேர்ந்த 15105 மாணவ மாணவியர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இவ் விழாவிற்கு இந்தியாவின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந் நிகழ்விற்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பாரிவேந்தர் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் பேசுகையில்,
பட்டம் பெரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஏபிஜே டாக்டர் அப்துல் கலாம் போல மாணவர்கள் சாதனை புரிய வேண்டும் எனவும் பட்டம் பெறுவது முக்கியமல்ல.
அனைவரும் தொழில் முனைவராக செயல்பட்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந நிகழ்வின் போது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J