Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 14 அக்டோபர் (ஹி.ச.)
துரைசாமி அங்கமுத்து, ரம்யா துரைசாமி, தமிழ்மணி ஆகியோர்கோவையில் Zpe எனும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் அவர்களது White Label ATM Franchise குறித்து சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளது.
அதனை பார்த்து கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கேரளா கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் அவர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது அவர்களை கோவை அவிநாசி சாலை நவஇந்தியா பகுதியில் உள்ள IZET E-PAYMENT PVT LTD நிறுவனத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.
அங்கு சென்ற பிறகு ATM இயந்திரங்களை Franchise ஆக வைக்க கொடுத்து விடுவோம் அந்த இந்திரத்தில் வங்கிகளின் ATM கொண்டும் பணம் எடுக்கலாம், Gpay போன்றவற்றின் மூலமும் பணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டு பணமாக எடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.
தங்களிடம் பல்வேறு Scheme கள் உள்ளது என்றும் முதலீடுக்கு தகுந்தாற்போல் வருமானமும் கமிஷனும் கிடைக்கும் மேலும் ஒவ்வொரு வாடிக்கையாளர் அந்த இயந்திரம் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் பொழுது அதற்கும் தகுந்தாற்போல் கமிஷன் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பி பலரும் 50 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். 45 நாட்களில் இயந்திரங்கள் ஒப்படைக்கப்படும் அதன் பின்னர் நாங்களே பணத்தை அதில் லோட் செய்து விடுவோம்.
பிறகு மாதமாதம் கமிஷன் வருமானம் ஆகிய பணத்தை கொடுத்து விடுவோம் என்று தெரிவித்துள்ளனர். முதலில் சிலருக்கு அந்த ATM இயந்திரங்களை கொடுத்துள்ளனர் ஆனால் அந்த இயந்திரங்கள் ஓரிரு வாரம் மட்டுமே வேலை செய்ததாகவும் அதன் பிறகு அந்த இயந்திரம் வேலை செய்யவில்லை என்றும் இது குறித்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டால் Update செய்து கொண்டிருக்கிறோம் என்ற பதில் அளித்ததாகவும் பணம் முதலீடு செய்த பலருக்கும் அந்த இயந்திரத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் அது குறித்து கேட்டால் ஏதேதோ காரணங்களை சொல்லி தட்டிக் கழித்து வந்ததாகவும் எனவே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தற்பொழுது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதனை நம்பி நூற்றுக்கணக்கானோர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் எனவே தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் தற்பொழுது அந்த நிறுவனம் மூடப்பட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த அவர்கள் அந்த நிறுவனத்தின் துவக்க விழாவில் சைலேந்திரபாபு உட்பட பல்வேறு பிரபலமானவர்கள் கலந்து கொண்டதாகவும் அவர்களெல்லாம் பார்த்து அதனை நம்பி தான் முதலீடு செய்து ஏமாந்து விட்டதாக வேதனை தெரிவித்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan