Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 15 அக்டோபர் (ஹி.ச.)
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து கோவை, காந்திபுரத்திற்கு கேரள மாநிலத்தின் அரசு பேருந்து வந்து கொண்டு இருந்தது.
இந்நிலையில் கோவை, உப்பிலிபாளையம் அருகே வேகமாக வரும் போது பேருந்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டு உள்ளார்.
பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தஇளைஞர் தனது வாகனத்தின் முன்பக்கம் முழுவதையும், பேருந்தின் பின்பக்கத்தில் சொருகி நின்றது.
இதனை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பேருந்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை கீழே படுக்க வைத்த நீங்க போராட்டத்திற்கு பின் வெளியே எடுத்தனர்.
இருசக்கர வாகனத்தின் முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகன ஓட்டி ஹெல்மேட் அணிந்து இருந்ததால் காயமின்றி தப்பினார். பேருந்து மற்றும் இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பந்தய சாலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan